Share on Social Media


தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 15வது மாநில நிதிக்கழு திட்ட பணிகள் (2020-2021) மந்தமாக நடக்கின்றன. விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனுார், கம்பம், கூடலுார் என 6 நகராட்சிகள் உள்ளன. சாலை, குடிநீர், பொதுசுகாதார வசதி உள்பட பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்ள 15வது மாநில நிதிக்குழு திட்டப்பணிகள் 2020-2021 சார்பில் ரூ.9.37 கோடி ஒதுக்கப்பட்டது. 6 நகராட்சிகளிலும் சேர்த்து 50 பணிகள் எடுக்கப்பட்டன.

இதில் தேனி நகராட்சியில் 13, பெரியகுளத்தில் 7, போடியில் 8, சின்னமனுார், கூடலுாரில் தலா 10, கம்பத்தில் 2 என மொத்தம் 50 பணிகளுக்கு திட்டமிடப்பட்டன. தற்போது வரை 8 பணிகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ளன. 42 பணிகள் நிலுவையில் உள்ளன. சின்னமனுார், கூடலுாரில் ஒரு பணிகளும் முடிக்கவில்லை. பெரியகுளம், போடியில் தலா 2 பணிகளும், தேனி 3 பணியும், கம்பத்திலும் ஒன்றும் முடிந்துள்ளன.

இதுவரை ரூ. 1.22 கோடி மட்டும் செலவிடப்பட்டுள்ளது. ரூ.8.14 கோடி மீதமுள்ளது. 2020-2021 நிதி ஆண்டு முடிவடைந்த நிலையில் திட்டப் பணிகள் முடிவடையாமல் உள்ளது. கொரோனா காரணம் கூறி திட்டப்பணிகள் நிறைவேறறுவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *