Share on Social Media


புதுடில்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில் பல்வேறு அரசியல் தலைவர்களும் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இன்று (ஏப்.,16) காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும் காங்., மூத்த தலைவருமான திக்விஜய சிங் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 3 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு அவர் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *