Share on Social Media


“மாஸ்டரின் இறப்புச் செய்தியை இப்போவரை நம்ப முடியல. சாயாசிங்னு ஒரு நடிகை இருக்கேன்னு மக்களுக்குத் தெரியப்படுத்தினதுல மாஸ்டருக்கு முக்கியான பங்கு இருக்கு. `மன்மதராசா’ பாட்டுதான் இப்போவரை எனக்கான அடையாளமா சொல்லப்படுது. அந்தப் பாடலுக்கு டான்ஸ் கொரியோகிராப் பண்ணப்போறது ரொம்ப சீனியர்னு சொன்னாங்க. அதனால் ஆரம்பத்துல கொஞ்சம் பயமா இருந்துச்சு.

ஆனா, எங்களுடைய முதல் சந்திப்பிலேயே மாஸ்டர் ரொம்ப ஃபிரெண்ட்லினு புரிஞ்சுகிட்டேன். தான் ஒரு சீனியர்னு எந்த ஆட்டிடியூடும் காட்டினது இல்ல. மன்மதராசா பாடலுக்கு மாஸ்டர் ஸ்டெப் சொல்லிக் கொடுத்ததும், `இல்ல மாஸ்டர் இந்த ஸ்டெப் எனக்கு வராது’னு சொன்னேன். ரொம்ப பொறுமையா, `ஒரு முறை முயற்சி பண்ணிப்பாருங்க’னு சொன்னாரு. டான்ஸ்ல சொதப்பினாகூட, `நல்லா பண்றீங்க. இன்னும் அழகா பண்ண, இன்னொரு டைம் ட்ரை பண்ணலாம்’னு சொல்லுவாரு. ஸ்டெப் சரியா வரலைனு ஒருமுறை கூட கோபப்பட்டது கிடையாது. தனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும், அதை வெளியில காட்டிக்க மாட்டார். எப்போதும் ஸ்மைலிங் ஃபேஸ்தான். முகபாவனைகளோடு அவர் ஆடுறதை பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கும். திருடா – திருடி படம் ஷூட் நடந்துட்டு இருந்தப்போ, நான் மாஸ்டரோட போன் நம்பரை வாங்காம விட்டுட்டேன். படம் ரீலிஸ் ஆகி, பாட்டு ஹிட் ஆனதும் அவருக்கு நன்றி சொல்லணும்னு தோணுச்சு.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *