Share on Social Media

காலெஜ் முதல் வருஷம் படிச்சப்போதான் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப்பயிற்சியாளர் ரஞ்சித்குமாரோட அறிமுகம் கிடைச்சது. அவர் மூலமா பத்து வருஷம் முன்னே தமிழ்நாட்டு டீமுக்காக ஆடுனேன்.

மாற்றுத்திறனாளிக்களுக்கான கிரிக்கெட்டுல என்னை வளர்த்துக்க ஆரம்பிச்ச நேரத்துல வீட்டுல ரொம்பவே எதிர்ப்பு இருந்துச்சு. கிரிக்கெட்டுக்கான கிட் வாங்கணும், பயிற்சி எடுக்கணும்னு வருமானத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லாததால அவுங்களுக்கும் நம்பிக்கை இல்லை. கல்யாணாத்துக்குப் பிறகு மாறிடுவான்னு கல்யாணமும் பண்ணி வச்சாங்க.

ஆனாலும், விளையாட்டுதான்னு உறுதியா இருந்தேன். இப்போ ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. கொரோனாவால ஸ்கூல் ஃபீஸ் கட்டுறதுக்கும் சிரமம்தான்.

சச்சின் சிவா அணி

சச்சின் சிவா அணி

விளையாடுறோம் ஆனாலும் கிரிக்கெட்டுக்கான அடிப்படை உபகரணங்களுக்கு கூட ஸ்பான்சர் இல்லாததால ஒரு கட்டத்துல கிரிக்கெட்டே வேணாம், குடும்பம் இருக்கு அதுக்குனு ஒரு வருமானம் வேணும்னு யோசிச்சேன். எல்லாத்தையும் விட்டு போயிடலாமான்னு நினைச்சப்போதான் நடிகர் சிவகார்த்திகேயன் வந்து மிகப்பெரிய நம்பிக்கைக் குடுத்தார்.

சிவகார்த்திகேயனுடன் சச்சின் சிவா

சிவகார்த்திகேயனுடன் சச்சின் சிவா

அடிப்படையில் ஆல்ரவுண்டர் நான். ஆனா கேப்டனா இருப்பதால ரெண்டயும் பேலன்ஸ் பண்ண முடியாததால இப்போ சென்னை டீம் கேப்டன் பொறுப்புல இருந்து விலகிட்டேன். கடந்த அஞ்சு வருஷமா இந்திய கிரிக்கெட் டீம்ல இருக்க ஒரே தமிழ்நாட்டு ப்ளேயர் நான்தான். தமிழ்நாட்டுல இருந்து நான் மட்டும்தான் செலக்ட் ஆகிருந்தேன். இப்போ மூணு பேரு இருக்கோம். ஆரம்பத்துல மொழிப்பிரச்னை இருந்தது. இப்போ கொஞ்ச கொஞ்சமா அதுலயும் மாறிக்கிட்டு வர்றேன்.”

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *