Share on Social Media

இன்னனும் சொல்லணும்னா என்னோட காலேஜ்ல எனக்கு பாடம் எடுத்த பேராசிரியர் மலைச்சாமி சார் கிட்ட இந்த விஷயத்த சொன்னப்போ ரொம்ப ஆர்வமா தன்னை இணைச்சுக்கிட்டார். கூடவே அவரோட வீட்டுல உள்ள ஒரு பகுதியை படிக்கட்டுகளுக்கு அலுவலகமாகவும் மாத்திக்க அனுமதி குடுத்தார். ஒரு ஆசிரியர், மாணவர் என்கிற உணர்வு தாண்டி, இப்போ மலைச்சாமி சார்தான் இந்த அமைப்போட முக்கியமான பொறுப்பில் இருக்கிறவர்.”

எவ்வளவு தன்னார்வலர்கள் இருக்காங்க?

“மதுரைல இருக்கற எல்லா காலேஜ்ல இருந்தும் 2012 பேட்ஜ் மாணவர்கள் சிலர், அவர்களின் நண்பர்கள், நண்பனோட நண்பர்கள்னு 45 பேரோட ஆரம்பிச்சோம். இப்போ 200 தன்னார்வலர்கள் இருக்காங்க. மதுரை, சென்னைனு இரண்டு பகுதிகளா வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்.

அதுபோக படிக்கட்டுகள் மூலமா பயனடைஞ்ச மாணவர்களே திரும்பவும் தன்னார்வலர்களா தங்களை இணைச்சு வேலை பார்க்கிறாங்க. இதெல்லாத்துக்கும் காரணம், நாங்க எதுவுமே எந்தப் பிரதிபலனுமே எதிர்பார்க்காம வேலை பார்த்ததுதான். மனசுக்கு ஒரு நிறைவா இருக்கு, பயனடைறவங்களோட வாழ்த்துலயும் ஒரு மனநிறைவும் சந்தோசமும் நிறைஞ்சு இருக்கு. அதுதான் எங்களை இன்னும் இன்னும் இயங்க வச்சுக்கிட்டு இருக்கு.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *