Share on Social Media


பெலகாவி-மதம் மாற்றம் தடை சட்ட மசோதா தாக்கல் செய்ய கர்நாடக அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியதால், சட்டசபையில் இன்று மசோதா தாக்கல் செய்ய பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது.

விஸ்வஹிந்து பரிஷத் சார்பில், வெவ்வேறு மடத்தின் மடாதிபதிகள் பங்கேற்ற கருத்தரங்கு பெலகாவியில் நேற்று நடந்தது.அப்போது, மதம் மாற்ற தடை சட்டம் கர்நாடகாவில் அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று மடாதிபதிகள் வலியுறுத்தினர்.கருத்தரங்கில் முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது:தற்போது மதம் மாற்ற தடை சட்டத்துக்கு, எதிர்ப்பு தெரிவிப்பவர்களே, இதற்கு முன் அமல்படுத்த முற்பட்டனர்.இந்த தடை சட்டத்தை 2016ல் செயல்படுத்த முன் வந்த காங்கிரஸ், அரசியல் காரணத்தால், சட்டத்தை அமல்படுத்துவதை கை விட்டது. இப்போது அமல்படுத்த, எதிர்ப்பு தெரிவிக்கிறது.பசவண்ணர் முதல் சங்கராச்சார்யார் வரை பலர், பக்தி மார்க்கத்தை ஏற்படுத்தினர். மேற்கத்திய நாடுகளில் வாழ்க்கை பாணி வேறு. நாம் நம் மதத்தில், மனித நேயத்தை பின்பற்றுகிறோம்.புத்த மதத்தால் ஓரளவு சங்கடத்துக்கு ஆளாகிறோம். இன்று ரகசியமாக மதம் மாற்றம் நடக்கிறது.

இதற்கு கடிவாளம் போட வேண்டும்.பிறப்பை யாராலும் நிர்ணயிக்க முடியாது. எந்த மதத்தில் பிறந்து, அதன் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனரோ, அவரை மதம் மாற்றம் செய்வது அநியாயம். எந்த காரணத்துக்காகவும், நம் மதத்தை விடக்கூடாது. நமது ஏழ்மை, இயலாமையை பயன்படுத்தி தவறாக பயன்படுத்தும் முயற்சி நடக்கிறது.மாநிலத்தில் மதம் மாற்றம் தடை சட்டம் கொண்டு வருவது நிச்சயம்.இவ்வாறு அவர் கூறினார்.

பின், சுவர்ண விதான் சவுதாவில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த தடை சட்ட மசோதா தாக்கல் செய்ய அமைச்சர்களிடம் முதல்வர் அனுமதி கோரினார். இதனால் ஏற்படும், சாதக பாதகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அனைத்து அமைச்சர்களும் அனுமதி வழங்கினர்.இதையடுத்து கர்நாடக சட்டசபையில் இன்று, தடை சட்ட மசோதா தாக்கல் செய்வதற்கு பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.