'மண்டேலா' இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மண்டேலா'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது.