Share on Social Media


புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் 2 எம்எல்ஏக்கள் பாஜ கட்சியில் இணைந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் 2017ம் ஆண்டு முதன் முறையாக பாஜ ஆட்சி அமைந்தது. இம்மாநில சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அம்மாநில பாஜ நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் காங்கிரசுடன் தொடர்புடைய அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்த சகோல்பாணட் தொகுதி எம்எல்ஏ ராஜ்குமார் இமோ சிங் மற்றும் சைகுல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ யம்தோங் ஹோகிப் ஆகிய இருவரும் புதுடெல்லியில் ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், மணிப்பூர் பாஜ பொறுப்பாளர் சம்பித் பத்ரா ஆகியோர் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர்.

இதில் ராஜ்குமார் சிங், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக அவர் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் கட்சியில் இணைத்துக்கொண்டு ஒன்றிய அமைச்சர் சோனாவால், ‘வடகிழக்கு பகுதியில் மோடி அரசு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் ஒன்றிய அமைச்சர்கள் தொடர்ந்து மக்களை சந்தித்து பிரச்னைகள் தீர்த்து வைத்து வருகின்றனர். அடுத்த தேர்தலில் பாஜவின் வெற்றி உறுதி என்ற நம்பிக்கை இருக்கிறது.’ என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *