Share on Social Media


விருத்தாசலம், : திட்டக்குடி தாலுகாவில் அமெரிக்கன் படைப்புழுவால் தாக்கப்பட்ட மக்காச்சோள வயல்களை அமைச்சர் கணேசன் பார்வையிட்டு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

திட்டக்குடி தாலுகாவில், 60 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். அறுவடைக்கு தயாரான நிலையில், மக்காச்சோளம் முழுவதும் அமெரிக்கன் படைப்புழுவால் தாக்கப்பட்டன. அதிர்ச்சிடைந்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.தகவலறிந்த அமைச்சர் கணேசன், டி.ஏந்தல் கிராமத்தில், தாக்குதலுக்கு உள்ளான மக்காச்சோள வயல்களை பார்வையிட்டார்.

படைப்புழு தாக்குதல் குறித்து முதல்வரிடம் கூறி, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் பரமகுரு, ஊராட்சித் தலைவர் அருணாசலம், விவசாய சங்க பிரதிநிதி மருதாச்சலம், இளைஞரணி சேதுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *