Share on Social Media


டேராடூன்: சில அரசியல் கட்சிகள் பொதுமக்களை சுயசார்பற்ற நிலைக்கு தள்ளி உள்ளனர் என்று குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, பா.ஜ., அரசு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை, என்றும் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் மற்றும் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக 8,300 கோடி ரூபாய் செலவில் டில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: சில அரசியல் கட்சிகள் பொதுமக்களை சுயசார்பற்ற நிலைக்கு தள்ளி உள்ளனர். தமது அரசு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை. பா.ஜ., அரசு நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு செயல்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சி செய்த அரசு 288 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தேசிய நெஞ்சாலை திட்டத்தை செயல்படுத்தியது. ஆனால் தமது அரசு கடந்த 7 ஆண்டுகளில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் துாரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் உத்தரகாண்ட் மாநிலம் முன்னிலையில் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *