Share on Social Media


புதுடில்லி: நாடாளுமன்றம் காந்திசிலை முன் இன்று (நவ.,29) காலை காங்., நடத்திய போராட்டத்தை அடுத்து மக்களை ஏமாற்ற ‘போலி காந்திகள்’ முயற்சி மேற்கொண்டுள்ளதாக கர்நாடகா பா.ஜ., தாக்கி விமர்சித்துள்ளது.

இன்று துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பார்லிமென்டின் இரு அவைகளிலும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன.

மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதில் விவாதம் தேவை என எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. விவாதம் இல்லாமல் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேறியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்து இருந்தார்.

‛‛வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்பே கூறியிருந்தோம். தற்போது அந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு பார்லி.,யில் விவாதம் நடத்த அஞ்சுகிறது,” எனக் கூறினார். இதற்கு தற்போது கர்நாடக பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.

‛‛விவசாய மசோதாக்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நீக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் காங்., கட்சியை சேர்ந்த ராகுலின் சொர்க்கபுரியில் வாழும் போலி காந்திகள் பலர் காந்தி சிலை முன் நின்று போராட்டம் நடத்துகின்றனர்,” என்று கர்நாடகா பா.ஜ., சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *