கேள்வியை ரசித்தவர்… “உண்டு உண்டு. அதனாலதான் இப்பவும் சில பிரச்னைகள் போயிட்டுக்கு. நான் ‘சக்கப் போடு போடுராஜா’ல முழுமுழுக்க கதாநாயகனானேன். அதுல யாரையும் கிண்டல் பண்ண மாட்டேன். எல்லார்கிட்டேயும் மரியாதையா பேசுவேன். அறிவுரைகள் சொல்வேன். ஆனா, மக்கள் அதை ரசிக்கல. அந்த சந்தானம் ஹீரோ சந்தானம்தான். ஸ்டைலா இருப்பான் சிக்ஸ்பேக் வச்சிருப்பான். கட்டுமஸ்தானா வந்து, ஹேர் ஸ்டைலும் அதுல மாத்தியிருப்பேன். நம்ம தமிழ் ஆடியன்ஸ் இல்லாமல், வேற ஒரு மொழியில அந்தப் படத்துல என்னை பார்க்கறவங்க, ‘ஹீரோவா கரெக்ட்டா பண்ணியிருக்கேன்’னுதான் சொல்வாங்க.
ஆனா, நம்ம மக்கள், ‘எங்களுக்கு அந்த சந்தானம் வேணாம். காமெடி வேணும். கொஞ்சம் கவுன்ட்டர் வேணும்’னு கேட்டாங்க. அதனாலதான் அதன்பிறகு ஜனங்க நம்மகிட்ட எதிர்பார்க்கறதையும் கலந்து கொடுக்க ஆரம்பிச்சேன். ஹீரோவைக் கலாய்ச்சு, காமெடி பண்ணுங்கனு கேட்டால், பழைய சந்தானம் திரும்ப வந்துடுவார். இப்ப, கேரக்டரோட அந்த விஷயங்களையும் சேர்த்து பண்ணும்போது ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். ஒரு விஷயத்துல கவனமா இருக்கேன். எதுனாலும் என்னோட ஃப்ளேவர் இருக்கணும்கறதுல உறுதியா இருக்கேன். ஏன்னா, சந்தானம் கேரக்டர் என்னிக்குமே மாறாது” எனக் கலகலக்கிறார் சந்தானம்.