Share on Social Media


தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அ.தி.மு.கவில் இருந்து பல நிர்வாகிகள், சசிகலாவைச் சந்திப்பார்கள். அ.தி.மு.க கூடாரம் கொஞ்சம், கொஞ்சமாகக் காலியாகும் என்றெல்லாம் பலர் ஆருடம் சொன்னார்கள். ஆனால், 66 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு எதிர்க்கட்சித் தலைவராகி ஜம்மென்று வலம் வருகிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தில் இருந்து ஒவ்வொருவராக கழன்று கொண்டிருக்கின்றனர்.

மகேந்திரன்- கமல்

மகேந்திரன்- கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகுவது புதிதல்ல. கட்சியின் தொடக்கவிழா நிகழ்ச்சியை நெறிப்படுத்திய, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கடந்த டிசம்பரில் பா.ஜ.கவில் இணைந்த அருணாசலம், தேர்தலுக்கு முன்பாக விலகிய, கட்சியின் பொதுச்செயலாளரும் கமலின் நண்பருமான கமீலா நாசர், தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு விலகிய அந்தக் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், சமீபத்தில் விலகிய தலைமை அலுவலக செயலாளரும் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபு, சுற்றுப்புறச்சூழல் அணியின் பொறுப்பாளர் பத்மப்பிரியா என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்கள் மட்டுமல்ல, தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கக் கூடிய சி.கே.குமரவேல்கூட கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்தவர்தான்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *