Share on Social Media


மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசு பஞ்சரான ஆட்டோவை போன்றது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

புனே நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் மகா விகாஷ் அகாடி செயல்பட்டு வருகிறது. சிவசேனா, காங்கிரஸ் , தேசியவாதகாங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்டோவில் உள்ள மூன்று டயர்களை போன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. பஞ்சராகி போன ஆட்டோ வெவ்வேறு திசையில் செல்வதை போன்று மூன்று கட்சிகளும் வெவ்வேறு திசைகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அரசு இயங்காமல் மாசுவை மட்டுமே ஏற்படுத்துகிறது.

latest tamil news

மாநில முதல்வர் தாக்கரேவின் உடல்நிலை சரியில்லை. கடவுள் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும். நல்ல ஆரோக்கியமாக இருந்த போது அரசு எங்கே என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். உரி மற்றும் புல்வாமா தாக்குதல்களுக்குப் பிறகு, மோடி அரசு பத்து நாட்களில் சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.