Share on Social Media


இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதேசமயம் கொரோனா தடுப்பூசிக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் அளித்த பேட்டியில், “கொரோனாவால் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

மோடி படத்துடன் சான்றிதழ்

கொரோனா தடுப்பூக்கு உரிமை கொண்டாடும் பிரதமர் மோடி கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறும் பட்சத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழிலும் மோடியின் படம் இடம் பெறவேண்டும்.

நாட்டில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இறப்புக்களும் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. உடல்களை எரிக்கும் இடத்தில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டுவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்து நிற்பது போன்ற வீடியோக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதைய இச்சூழ்நிலைக்கு மத்திய அரசு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது.

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்மருந்துகளை தயாரிக்கும் அனைத்து கம்பெனிகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிப்பதில்லை. இம்மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்திருப்பதால் ஏற்றுமதியை மட்டுமே குறிக்கோளாக கொண்டுசெயல்பட்ட16 கம்பெனிகள் தாங்கள் தயாரித்துள்ள ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. மத்திய அரசு தாங்கள் இம்மருந்துகளை வாங்கும் 7 கம்பெனிகள் மட்டுமே இம்மருந்தை விற்பனை செய்யவேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே தான் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

WhatsApp Image 2021 04 16 at 16 38 52 1 Tamil News Spot

இதற்கிடையே மகாராஷ்டிராவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. திரவ நிலை ஆக்சிஜன் ரயில்களில் கொண்டு வரப்படும் என்றும் இதற்கான கட்டணத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதில் தலையிட்டு தீர்வு காணும்படி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் மோடி தேவைப்படும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறைகளிடம் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *