Share on Social Media


விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் `நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியானது. தமன்னாவின் மிரட்டும் நடிப்பில் வெளிவந்த இந்த வெப் சீரிஸில் `மைனா’ நந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலகல நந்தினியாக மட்டுமே அறியப்பட்டுவந்த நந்தினிக்குள்ளே “இப்படி ஒரு நந்தினி இருக்காங்களா..?” என நினைக்க வைத்திருக்கிறது அவரின் யதார்த்தமான நடிப்பு. நவம்பர் ஸ்டோரியில் நடித்த அனுபவம் குறித்து மைனா நந்தினியிடம் பேசினோம்.

“காமெடி கதாபாத்திரங்கள்ல நடிக்குறது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதே வேளை, எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாற முடியுறதுதான் கத்துக்குறதுக்கான அடுத்தடுத்த கட்டம்னு நினைக்குறேன். `நவம்பர் ஸ்டோரி’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா… என் குட்டி மகன் துருவனும் நவம்பர் ஸ்டோரி ஷூட்டிங்குக்கு தினமும் என்கூட வந்திருக்கான். அதுவும் இல்லாம துருவனோட கொண்டாடுற என்னோட முதல் பிறந்தநாள்லதான் நவம்பர் ஸ்டோரியும் ரிலீஸ் ஆகியிருக்கு. என்னோட முப்பதாவது பிறந்தநாளை மறக்கவே முடியாதுங்க. வாழ்க்கைக்கான அர்த்தத்தை ஆழமா உணர ஆரம்பிச்சிருக்கேன்” என பிரமிப்பு குறையாமல் பேசுகிறார் மைனா நந்தினி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *