Share on Social Media


எனவே பெரிய அளவிலான நீச்சல் குளங்களில் பயிற்சி எடுத்துக்கொள்வதற்காக நடிகர் மாதவன் தனது மகன் மற்றும் மனைவி சரிதாவுடன் மும்பையிலிருந்து துபாய்க்குச் சென்றுவிட்டார்.

இது குறித்து மாதவன் கூறுகையில், “வேதாந்த் ஒலிம்பிக் போட்டிக்கு தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறான். எனவே அவனுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம். வேதாந்த் உலக அளவில் நீச்சல் போட்டியில் ஏராளமான பரிசுகளை வென்று இருக்கிறான். அவனை நினைத்து பெருமைப்படுகிறோம். நானோ அல்லது எனது மனைவியோ எங்களது மகன் நடிகனாக வரவேண்டும் என்று விரும்பவில்லை.

சரிதா மாதவன் - வேதாந்த்

சரிதா மாதவன் – வேதாந்த்
File Photo

குழந்தைகளுக்கு அவர்கள் அருகில் இருப்பதை நன்றாகக் கவனித்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள். வீட்டில் தனியாக இருக்கும் பாட்டி, தாத்தாவிற்கு உதவி செய்ய உற்சாகப்படுத்தலாம். வீட்டில் தாவரங்கள் அல்லது விலங்குகள் இருந்தால் அதனைக் கவனித்துக்கொள்ளும்படி குழந்தைகளிடம் கேட்டுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் சாதனைகள் செய்ய பாலிவுட் நட்சத்திரங்கள் ஆன்லைனில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மாதவன் இயக்கி வரும் இந்திப் படமான ‘ராக்கெட்ரி’ படத்தின் வேலைகளும் முழு அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வர இருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.