Share on Social Media


நகரி-சித்துார் மாவட்டம், பலமநேர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமையா, 47. இவர் தலைமையில் போலீசார், பலமநேர் டவுன் பகுதியில், வாகன தணிக்கை மற்றும் முக கவசம் அணியாமல் வருவோரிடம் அபராத தொகை வசூலித்து வந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்த வாலிபரை, போலீசார் மடக்கி பிடித்து, இன்ஸ்பெக்டரிடம் அழைத்து சென்றனர். அப்போது தான் போலீசாருக்கு, ராகுல், இன்ஸ்பெக்டரின் மகன் என, தெரிந்தது.பின், போலீசார் ராகுலை அங்கிருந்து அனுப்ப முயன்றனர்.

அதற்கு, இன்ஸ்பெக்டர் ஜெயராமையா, முக கவசம் அணியாமல் வந்தது, என் மகன் என்றாலும் குற்றம்தான். ‘அவரிடம், 125 அபராதம் வசூல் செய்து, அதற்கான ரசீது கொடுத்து அனுப்புங்கள்’ என, உத்தரவிட்டார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed