Tamil News No20 29 671337306499482 Tamil News Spot
Share on Social Media

மதுரை: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை இன்று விசாரிக்கிறது.
ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று வக்கீல் நீலமேகம் ஆஜராகி, ‘‘ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கக் கோரி வக்கீல் முகம்மது ரஸ்வி ெபயரில் மனு செய்துள்ளோம். அதை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’’ என்றார். நீதிபதிகள் மனுவை, ‘‘நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்’’ என்றனர். வக்கீல் முகமது ரஸ்வி தாக்கல் செய்த மனு: இந்தியாவில்  400 ஆன்லைன் விளையாட்டுகளுக்கான செயலிகள் உள்ளன. கொரோனா காலத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் 24% அதிகரித்துள்ளன. இதற்கான விளம்பரங்களில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் நடித்துள்ளனர்.

நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள மறைமுகமான தாக்குதலாகவே இந்த ‘சைபர் வார்’ உள்ளது. இளைஞர்களை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்கி, இறுதியில் வேறுவழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த போலீஸ்காரர் சரவணன், சென்னையை சேர்ந்த தினேஷ், தெலங்கானாவை சேர்ந்த மதுக்கர், ஆந்திராவை சேர்ந்த வேங்கட அரவிந்த் உள்ளிட்ட 10 பேர் ஆன்லைன் விளையாட்டுகளால் தற்கொலை செய்துள்ளனர்.   

எனவே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும். அதற்கு விளம்பர தூதர்களாக செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இதேபோல், மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *