Share on Social Media


மதுரா : ”உத்தர பிரதேசத்தில் தம்பதியிடம் பணம் பறித்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அம்மாநில மீன்வளத் துறை அமைச்சர் லட்சுமி நரேன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த தையப் என்பவர், மனைவி யுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, இரு போலீசார் வழிமறித்து, அவர் வைத்திருந்த 6 லட்சம் ரூபாயை பறித்துள்ளனர். தம்பதியை சிறையில் அடைத்து மறுநாள் விடுவித்துள்ளனர். இது குறித்து அந்த தம்பதி, மாநில மீன்வளத் துறை அமைச்சர் லட்சுமி நரேன் சவுத்ரிக்கு புகார் அனுப்பிஇருந்தனர். அதில், நிலம் வாங்குவது தொடர்பாக பணத்துடன் மாமியார் வீட்டுக்குச் சென்றபோது போலீசார் பணத்தை பறித்து, மனைவியுடன் சிறையில் அடைத்தது குறித்து குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து, லட்சுமி நரேன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:பா.ஜ., ஆட்சியில் இது போன்ற சம்பவங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. இது குறித்து விசாரித்து தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *