Share on Social Media


ஆனால், புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பால்நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குமரன் தெரிவிக்கிறார். இதுகுறித்துப் பேசிய குமரன், “ஊராட்சித் தலைவர் நேருவின் சாதியப் போக்கை கண்டித்து, அவரை கைதுசெய்யக்கோரியும், நாங்கள் அளித்த புகார்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும், எங்கள் ஊரைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் நாங்களும், தோழர் சாலமன் மற்றும் அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி அமைப்பினரும் இணைந்த்து நவம்பர் 24-ம் நாள் திருப்பெரும்புதூரில் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினோம். அப்போதே, காவல்துறையினர் ஆர்பாட்டம் நடக்கவிடாமல் செய்வதற்காக பல்வேறு கெடுபிடிகளைச்செய்தனர்.

காவல்துறைக்கும் எங்களுக்கும் வாக்குவாதம்கூட நடந்தது. அதன்பின்னர், நவம்பர் 30-ம் தேதி, பால்நெல்லூர் ஊராட்சித் தலைவர் நேரு தலைமையில் மீண்டும் கிராமப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்குச்சென்ற நாங்கள் `குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நேருவின் தலைமையில் எப்படி கிராமப் பொதுக்கூட்டம் நடத்தலாம்’ என நியாமாக கேள்வி எழுப்பினோம். ஆனால், அப்போதும் எங்களை கேள்விகேட்க விடாமல், அதிகாரிகள் வெளியேற்றினர்.

அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி

அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி

இந்த நிலையில்தான், டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சாலமனை, ஆறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலவந்தமாக கைதுசெய்து, பொதுமக்கள் முன்னிலையில் அடித்து இழுத்துச் சென்றிருக்கின்றனர். மேலும், சம்மந்தப்பட்ட திருப்பெரும்புதூர் காவல்நிலையத்துக்கு கொண்டுசெல்லாமல், 30 கி.மீ. தொலைவில் உள்ள மணிமங்கலம் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று, காவல்துறையினர் கடுமையாக தாக்கியிருக்கின்றனர்” எனக்கூறினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.