Share on Social Media


கோவை; வாள், துப்பாக்கி, பீரங்கி என கொடூர ஆயுதங்கள் கொண்டு பல நாடுகளை வீழ்த்திய ஆங்கிலேயர்களை எதிர்கொள்ள, நம் நாட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் கையில் எடுத்த பேராயுதம்தான் ‘அகிம்சை’. அகிம்சையை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்து சென்றார்கள்.

நாட்டு சுதந்திரத்துக்காக தனது சொத்துக்களையும், தன்மானத்தையும் இழந்து, சிறையில் கொடூர தண்டனைகளை அனுபவித்தும், இன்னுயிர் நீத்தசுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம், தலைமுறை தாண்டினாலும் மறையாது என்பதே நிதர்சனமான உண்மை.

இந்திய போராட்டத்தின் போது, அந்தமான் சிறையில் ஆங்கிலேயரால் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளானவர்கள் ஏராளம். சுதந்திரத்துக்கு பிறகு அவர்களுக்கு, ஓய்வூதியத்தை(மதிப்பூதியம்) மத்திய அரசு வழங்கியது. தொடர்ந்து, அவர்கள் ரத்தம் சிந்தியதை கவுரவிக்கும் விதமாக, ‘தாமிரப் பத்திரம்’ எனும் விருதை வழங்கி, குடும்ப ஓய்வூதிய திட்டமும் அறிவிக்கப்பட்டது. இப்படி பெருமைக்குரிய ‘தாமிரப் பத்திரம்’ பெற்றவர்கள் ஏராளம்.

அதில், கோவையை சேர்ந்த தியாகி காமாட்சியும் ஒருவர். சிங்காநல்லுாரை சேர்ந்த இவர் அந்தமான் சிறையில் இரு ஆண்டுகள் இருந்து சித்திரவதைக்கு ஆளானார். ஊனமுற்றவராக வெளியே வந்த இவருக்கு கடந்த, 1972ம் ஆண்டு மத்திய அரசு வழங்கி கவுரத்த’தாமிரப் பத்திரம்’தான் இது.

தாமிரப் பத்திரம் குறித்து, இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவுதான். இன்று, 75வது சுதந்திர தினம் கொண்டாடி மகிழும் நாளில், நாட்டுக்காக தியாகம் செய்த தியாகிகளை போற்றுவோம். அவர்களின் தியாகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு, செல்ல வேண்டியது, நமது கடமை.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *