Share on Social Media


எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அவையின் 76-வது பொது அவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தேவையற்ற போர்களில் இனி அமெரிக்கா ஈடுபடாது என்றார். உலகத்தின் முன்பு தற்போதுள்ள சவால்களுக்கு போர்கள் மூலம் தீர்வு காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தன்னையும் தனது கூட்டாளிகளையும் காப்பாற்ற வேண்டிய தேவையிருந்தால் போரை கடைசி ஆயுதமாகத்தான் அமெரிக்கா பயன்படுத்தும் என்றும் அதிபர் பைடன் கூறினார்.
 
image
எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை என்ற ஜோ பைடன், அமைதிக்காக எந்த நாட்டுடன் இணைந்து செயல்படவும் தயார் என்றார். கொரோனா போன்ற பெருந்தொற்றை வெடிகுண்டுகள் மூலம் தடுக்க முடியாது என்றும் அரசியல் மற்றும் அறிவியல் சார்ந்த கூட்டு முயற்சியே தேவை என்றும் பைடன் வலியுறுத்தினார். மேலும், பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அதிகரிக்கப்படும் என்றும் பைடன் உறுதி அளித்தார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

oS6EbcXRn5I Tamil News Spot



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *