Share on Social Media


மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளான் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இந்த முடிவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் வரவேற்றிருக்கிறார்.

”மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவரும், ஏர்முனை இளைஞர் அணியின் தலைவரும், விஸ்வாசம், அண்ணாத்த படங்களளின் ஒளிப்பதிவாளருமான என்.எஸ்.பி. வெற்றியிடம் பேசினேன்.

”வேளாண் சட்டத்தைக் கண்டித்து எங்க அமைப்பு சார்ப்பில் திருப்பூர், கோவை பகுதிகளில் நிறைய போராட்டங்கள் பண்ணியிருக்கோம். டெல்லி செல்லலாம்னு விவசாயிகள் போராட்டம் செய்தது போல, நாங்கள் சென்னையை நோக்கினு ஒரு போராட்டம் பண்ணினோம். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர்ல முதன் முதலா மூன்று பேர் 1971ல சுட்டுக்கொல்லப்பட்டாங்க.

அந்த இடத்தை நோக்கி, நாங்க சென்னையை நோக்கி வாகனப்பயணம் செல்கிறோம்னு சொன்னதும் காவல்துறை எங்களை அனுமதிக்கல. எங்களைக் கைது செய்து ஒருநாள் முழுக்க மண்டபத்துல வச்சிருந்தாங்க. அந்த மண்டத்தில் காவல்துறை கொடுத்த ஒரு சொட்டு தண்ணீரைக் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தோம். இரவு ஒன்பதரைக்குதான் எங்களை ரிலீஸ் பண்ணினாங்க. அதே போல திருப்பூர்ல இதே போல ஒரு மழை நாள்லேயும் ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணினோம். டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்திற்கும் எங்க அமைப்பில் இருந்து சென்று, ஆதரவு கொடுத்துட்டு வந்தோம். தொடர்ந்து போராடினோம். எல்லோருடைய போராட்டங்களும் வென்றது. இதை மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கறோம். இந்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தினதுல நிறைய விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர். மக்கள் சக்திக்கு முன்பு சர்வாதிகாரமும் எதேச்சாதிகாரமும் ஒருபோதும் வென்றதில்லை என்பதை உணர்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற இருப்பதாக அறிவித்திருப்பது உழவர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *