Share on Social Media


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என தன்னுடடைய ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான நடிகை நயந்தாரா சென்னையில் நடிகர் ரஜினிகாந்த், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது வீடுகள் இருக்கும் போயஸ் கார்டன் ஏரியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதுகுறித்து நயன்தாராவின் நெருங்கிய நட்பு வட்டத்திலுள்ள சிலரிடம் பேசினேன்.

”இன்னைக்குத் தேதிக்கு தமிழ் சினிமாவின் ஸ்டார் ஜோடின்னா அது விக்னேஷ் சிவன் – நயன்தாராதான், ‘ரெண்டு பேரும் எப்பக் கல்யாணம் செய்துக்கப் போறாங்க’ன்னு நயன்தாராவின் ரசிகர்களைத் தாண்டி சினிமாப் பிரபலங்களுமே ஆவலோடு காத்திருக்காங்க.

ஆனா இப்போதைக்கு கையில 6 படங்களுடன் பிஸியாக இருக்காங்க நயன். ‘கனெக்ட்’னு ஒரு படம் ஷூட் இப்பதான் தொடங்கியிருக்கு. விக்னேஷ் சிவன் டைரக்ஷன்லயே ஒரு படத்துல நடிக்கிறாங்க. தவிர மலையாளத்துலயும் சில படங்களின் ஒர்க் போயிட்டிருக்கு. இப்படிப் பரபரப்பா ஓடிகிட்டு இருக்கிறதால கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பிறகுதான் கல்யாணம் செஞ்சிப்பாங்க.

ஆனா திருமணம் முடிஞ்சதும் சென்னையில வசிக்க அமைதியான சூழல்ல ஒரு வீடு வேணும்னு ரெண்டு பேருமே ஆசைப்பட்டதாத் தெரியுது.

Also Read: ஒரு ட்வீட்; உதவிய உதயநிதி; ரிலீசான மாநாடு! பின்னணி இதுதான்…

விக்னேஷ் சிவன், நயன்தாரா

இப்ப குடியிருக்கிற எழும்பூர் பிளாட்டைவிட சிறந்ததா ஒரு வீடு வேணும்னு தேடினப்பதான் சென்னையின் பிரபல கட்டுமான நிறுவனம் போயஸ் கார்டனில் எழுப்பி வரும் அந்த பிரமாணடமான அபார்ட்மென்ட் அவங்க கண்ணுல பட்டிருக்கு.

போய் பார்த்த நயனுக்கு அந்த இடம் பிடித்துப்போக உடனடியாக ஒன்றல்ல, இரண்டு பீளாட்களை புக் செஞ்சிருக்காங்க நயன்தாரா. ரெண்டுமே நான்கு படுக்கையறைகள் கொண்டது.

இப்ப அந்த புராஜெக்ட் முடியற நிலையில இருக்கறதால, சீக்கிரத்துலயே அதாவது கைவசம் இருக்கிற படங்களை முடிச்சு கல்யாணமும் முடியறப்ப குடியேற வீடும் தயாரா இருக்கும்” என்றனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் வசிக்கிற அதே ஏரியாவில் லேடி சூப்பர் ஸ்டாரும் குடியேறப் போகிறாரா?!.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *