Share on Social Media


குடிப்பழக்கம் உள்ள ஒரு நபருக்கு, ஒயின் ஷாப்பை பார்த்தாலே குடிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். அதுவே அதே நபர், சில மாதங்களுக்கு குடிப்பழக்கத்தை நிறுத்தியிருந்த நிலையில், மீண்டும் ஒயின் ஷாப்பை பார்க்கும்போது, முன்பிருந்த அதே உந்துதல் இருக்காது. அந்த இடைப்பட்ட காலத்தில் மூளை அதற்கேற்ப தன்னைப் பழக்கியிருக்கும்.

Drugs (Representational Image)

Drugs (Representational Image)
Photo by MART PRODUCTION from Pexels

இதை `நியூரோ அடாப்டேஷன்’ என்கிறோம். தீவிர குடிப்பழக்கம் உள்ள ஒரு நபர், காலையில் எழுந்தது முதல் இரவுவரை ஒரே மாதிரியான வேலைகளைச் செய்வார். ஒரே கடைக்குச் செல்வார், மது வாங்குவார், குடிப்பார். இந்தத் தொடர் நடவடிக்கைகளுக்கு இரண்டு, மூன்று மாதங்கள் இடைவெளி விடும்போது, நியூரோ அடாப்டேஷன் மாறி, மூளையில் புதிய மாற்றங்கள் உருவாகும். அந்த இரண்டு, மூன்று மாதங்களைத் தாண்டுவதே பாதி வெற்றிதான்.

அதன்பிறகு அந்த நபர் போதையிலிருந்து முழுவதுமாக வெளியே வருவாரா என்பது மேற்குறிப்பிட்ட மற்ற காரணிகளையும் பொறுத்தது. போதை மறுவாழ்வு மையங்களுக்கு சிகிச்சையளிக்கப் போகும்போது இப்படி நிறைய பேரை சந்திக்கிறேன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.