Share on Social Media


உங்கள் வீட்டுக்குள்ளேயோ, உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களின் வீடுகளிலோ போதை அடிமைகள் இருக்கக்கூடும். பலகாலமாக இருந்த அந்த போதைப் பழக்கம் உங்களுக்குத் துளிக்கூட சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்காது. திடீரென ஒருநாள் தெரியவரும்போது அதிர்ச்சிக்குள்ளாவீர்கள்… இந்தத் தொடரின் முதல் அத்தியாங்களிலேயே இது குறித்து எச்சரித்திருந்தோம்.

Addiction (Representational Image)

Also Read: போதை மாஃபியா: திவ்யாவுக்கு நேர்ந்தது உங்கள் வீட்டிலும் இப்போது நடந்து கொண்டிருக்கலாம்; உஷார்! – 1

பிள்ளைகளுக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பது தெரியவந்தாலோ, இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தாலோ அவர்களைக் கையாள்வதில் பெற்றோர் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தில் கோபமாகவோ உணர்ச்சிப் பிழம்பாகவோ மாறி அவர்களைக் கையாண்டால் அது பல்வேறு விபரீதங்களை ஏற்படுத்தலாம். இதுபோன்ற செயல்பாடுகள் வீட்டைவிட்டு வெளியேறுவது, பெற்றோரிடம் வன்முறை அல்லது கோபமாக நடந்துகொள்வது முதல் பயத்தால் தற்கொலை வரை இட்டுச் செல்லக்கூடும் என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதுபோன்ற தருணங்களில் குழந்தைகளிடம் எப்படியான வார்த்தைகளைப் பேச வேண்டும், எப்படி அவர்களைக் கையாண்டால் போதைப் பழக்கத்திலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர முடியும் என நிபுணர்கள் பட்டியலிடும் 10 விஷயங்கள் இதோ:

1. திறந்த மனதுடன் பேசுங்கள்

நாம் தவறு செய்துவிட்டதாக பெற்றோர் நினைத்துவிட்டார்கள் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். எனவே, தவறு செய்துவிட்டது போன்ற மனநிலையை ஏற்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு திறந்த மனதுடன் பேசுங்கள்.

Tamil News Spot
Drugs (Representational Image)

Also Read: போதை வலைக்கு இலக்காகும் பெரிய இடத்துப் பிள்ளைகள்; பின்னணி இதுதான் – நான் அடிமை இல்லை – 13

2. அந்த இடத்தில் உங்களைப் பொருத்திப் பாருங்கள்:

இதுபோன்ற இக்கட்டான சூழலில் நீங்கள் இருந்தால் உங்களை எப்படிப் பிறர் கையாள வேண்டும் என்று விரும்புவீர்களோ அதே போன்று உங்கள் பிள்ளைகளையும் கையாளுங்கள். அந்த வயதில் உங்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்று உணர்ந்து அவர்களைக் கையாளுங்கள்.

3. எல்லைகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்

சொல்ல விரும்பும் விஷயத்தைத் தெளிவாகவும் நேரடியாகவும் நேர்மையாகவும் சொல்லுங்கள். அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை நீங்கள் விரும்புவதில்லை என்றும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களைச் செய்தால் என்ன விளைவுகளை உங்கள் தரப்பிலிருந்து அவர்கள் சந்திப்பார்கள் என்ற எல்லையை நிர்ணயித்துப் பேசுங்கள்.

man 390339 960 720 Tamil News Spot
Addiction (Representational Image)

Also Read: பாலிவுட்டில் மட்டுமல்ல; கோலிவுட்டிலும் தலைவிரித்தாடும் போதை மோகம்; எங்கே, எப்படி? – 12

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதை நீங்கள் ஏன் விரும்பவில்லை அல்லது அனுமதிப்பதில்லை என்பதைக் காரணத்துடன் விளக்குங்கள். அது போன்ற பயன்பாடு என்னென்ன மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கலந்துரையாடலில் அவர்களையும் இணைந்து பேசச் சொல்லுங்கள்.

4. மதிப்பீடு செய்யுங்கள்

இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேசி முடித்தவுடன் அந்தக் கலந்துரையாடலில் என்னவெல்லாம் சரியாக இருந்தது, எதெல்லாம் சரியில்லை என்பதை நீங்களே மதிப்பீடு செய்யுங்கள். தவறாகக் கையாண்ட விஷயங்களை அடுத்த முறை எப்படி சரிசெய்து பிள்ளைகளிடம் பேசுவது என்று சிந்தியுங்கள்.

Tamil News Spot
Drugs (Representational Image)

5. நிதானம் பிரதானம்

கோபத்துடனும் பதற்றத்துடன் இளைஞர்களைக் கையாண்டால் நீங்கள் நினைத்ததை அடைய முடியாது. அவர்களிடம் பேசுவதற்கு முன்பு உங்களை அமைதிப்படுத்தும் விஷயங்களைச் செய்யுங்கள். சிறிய நடைப்பயிற்சி, நண்பர்களுடன் ஓர் அரட்டை, தியானம் போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

6. நேர்மை அவசியம்

எதிரிலிருக்கும் குழந்தைகளை மதித்துப் பேச வேண்டியது அவசியம். மேலும் அவர்களைத் திருத்துகிறேன் என்று பயமுறுத்தும் விஷயங்களைச் சொல்வதோ அவர்களைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை வைப்பதையோ செய்யாதீர்கள். நேர்மையாக விஷயங்களைக் கையாள்வதன் மூலம் பிள்ளைகள் அந்தச் சூழலை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும். பாதுகாப்பில்லா சூழலாக உணர்ந்தால் பிள்ளைகள் உண்மையைச் சொல்லத் தயங்குவார்கள்.

hand 782688 1920 Tamil News Spot
Parenting

Also Read: மருத்துவ மாணவர்களையும் பாதிக்கும் போதை மருந்துகள்; அதிர்ச்சி யதார்த்தம்! – நான் அடிமை இல்லை – 10

7. எடுத்துக்காட்டுகளைக் காட்டுங்கள்

டிவி நிகழ்ச்சி, திரைப்படங்கள், வீடியோக்கள், சோஷியல் மீடியா அல்லது உண்மைச் சம்பவங்களின் மூலம் அவர்களுக்கு நல்லதை எடுத்துக்கூறலாம்.

8. பாடமெடுக்காதீர்கள்

போதைப்பழக்கத்திலிருக்கும் பிள்ளையைத் திருத்துகிறேன் பேர்வழி என்று அவர்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடாதீர்கள். இது அவர்களின் கவனத்தைத் திசைத்திருப்பவோ, கோபப்படவோ வைக்கலாம்.

9. அணுகுமுறை முக்கியம்

குற்றவாளியை போலீஸ்காரர் விசாரணை செய்வதுபோல் பிள்ளைகளை அணுகாதீர்கள். `டின்னர் முடிச்சிட்டு கொஞ்ச நேரம் பேசுவோமா?’ என்பது போல கனிவான அணுகுமுறையைப் பின்பற்றுங்கள். அவர்களுடன் சிறிய நடைப்பயிற்சி செய்தபடியோ, வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்தோ மாடியில் அமர்ந்தோ பேச முயற்சி செய்யலாம். யார் தொந்தரவும் இல்லாத அதே நேரம் அதிக கவனச் சிதறல் ஏற்படாத இடமாகத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும்.

Tamil News Spot
Drug (Representational Image)

Also Read: மருந்தகங்களே துணை போகும் `காக்டெயில் போதை’, இளைஞர்கள் வீழ்வது எப்படி? – நான் அடிமை இல்லை – 9

10. உடல்மொழியில் கவனம் தேவை

பேசும்போது உங்கள் பிள்ளை உட்கார்ந்திருந்தால் நீங்களும் உட்கார்ந்து பேசலாம். நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது பிள்ளை நின்றுகொண்டிருந்தால் அருகில் உட்கார வையுங்கள். மிகவும் ரிலாக்ஸ்டாக பிள்ளை உணரும் வகையில் அவர்களின் தோளில் கைபோட்டோ, தலையை வருடியபடியோ, விரல்களைப் பிடித்துக்கொண்டோ பேசலாம். கோபமான உடல்மொழியோ பதற்றமான உடல்மொழியையோ நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

இது பொதுவான அணுகுமுறைக்கான ஆலோசனைதான். வயதுக்கேற்ற உரையாடல் என ஒன்றையும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அது அடுத்த அத்தியாயத்தில்…Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *