Share on Social Media


திருப்பூர்:”முடிவடைந்து, 15 மாதங்களாகிவிட்டதால், சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும்” என்று, அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.திருப்பூர் பனியன் தொழிலாளருக்கு, 2016ல் போடப்பட்ட சம்பள ஒப்பந்தம், 2020, மார்ச் 31ல் முடிவடைந்தது.
புதிய ஒப்பந்தத்துக்காக, தொழிற்சங்கங்கள் இணைந்து, ஒருங்கிணைந்த கோரிக்கை பட்டியல் தயாரித்து, ஆடை உற்பத்தியாளர் சங்கங்களிடம் அளித்தன.கொரோன முதல் அலை, சட்டசபை தேர்தல், இரண்டாவது அலை போன்ற காரணங்களால், ஒப்பந்த பேச்சு, முதல் கட்டத்துடன் நின்றது; இரண்டாவது அலை தணிந்து, ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன. தொழிலாளர்கள், திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க அலுவலகத்தில், அனைத்துபனியன் தொழிற்சங்க கூட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க பொதுச்செயலாளர் சேகர் தலைமையில் நடந்த கூட்டத்தில், சம்பத், ஈஸ்வரமூர்த்தி (சி.ஐ.டி.யு.,), பூபதி, தங்கராஜ் (எல்.பி.எப்.,), விஸ்வநாதன் (அண்ணா தொழிற் சங்கம்), சிவசாமி (ஐ.என்.டி.யு.சி.,), மனோகர் (எம்.எல்.எப்.,), முத்துசாமி (எச்.எம்.எஸ்.,) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.’சம்பள ஒப்பந்தம் முடிந்து 15 மாதங்களாகியும், இன்னும் புதிய ஒப்பந்தத்துக்கான, பேச்சுவார்த்தை கூட நடத்தப்படவில்லை.
எரிபொருள், உணவு பொருட்கள் விலைகள் அதிகரிப்பால், தொழிலாளர் தவிக்கின்றனர். ஆடை உற்பத்தி சங்கங்கள், இனியும் தாமதிக்க கூடாது; உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளருக்கு சம்பள உயர்வு அளிக்கவேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மான விவரங்கள், ஏற்றுமதியாளர் சங்கம், ‘சைமா’, ‘நிட்மா’, ‘சிம்கா’, ‘டெக்மா’, ‘டீமா’ உள்ளிட்ட ஆடை உற்பத்தியாளர் சங்கத்தினருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *