Share on Social Media


புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ள நிலையில், பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளை மீட்பதற்கான சலுகை திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல்வேறு சலுகை

கொரோனா வைரஸ் பரவல் முதல் அலையின்போது, நாடு முழுதும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட தனிநபர், நிறுவனங்கள், தொழில் துறைகளுக்கு, மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்தது.தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. பாதிப்பை குறைக்கும் வகையில், பல மாநிலங்கள் முழு முடக்கத்தை அறிவித்துள்ளன. இதனால், பல துறைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

சுற்றுலா, விமானப் போக்குவரத்து, விருந்தோம்பல் துறை ஆகியவை கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளன. அத்துடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளன.

பரிந்துரை

‘பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ள இந்த துறைகளை மீட்க, சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும்’ என, தொழில் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு பரிந்துரைகள், ஆலோசனைகளையும், அவை அனுப்பியுள்ளன.இதனடிப்படையில், ‘எந்தெந்த துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க என்னென்ன திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கலாம்’ என்பது குறித்து, நிதி அமைச்சகம் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *