Share on Social Media

அடுத்த பொருளாதார ஆலோசகரைத் தேர்வு செய்யும் அறிவிப்பினை ஏற்கெனவே மத்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. அடுத்து வேறு ஒருவர்தான் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்பதைத் தெரிந்துகொண்டே, சுப்பிரமணியன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து தீடீரென விலகினார் அரவிந்த் சுப்பிரமணியம். அதனைத் தொடர்ந்து அதிவேகமாக செயல்பட்ட மத்திய அரசாங்கம், சுப்பிரமணியன் கிருஷ்ணமூர்த்தியைத் தேர்வு செய்தது.

அரவிந்த் சுப்பிரமணியம்

அரவிந்த் சுப்பிரமணியம்

இந்நிலையில் தற்போது அரசு மீண்டும் அதேபோன்ற ஒரு சூழ்நிலையில் இருக்கிறது. புதிதாகத் தேர்வாகும் பொருளாதார ஆலோசகர் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். கோவிட்-19-க்குப் பிறகு பொருளாதாரம் கணிசமாகக் குறைந்து, தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தத் தேவையான அனைத்து யோசனைகளையும் புதிய பொருளாதார ஆலோசகர் சொல்லியாக வேண்டும்.

தவிர, பொருளாதார ஆலோசகர் பதவியைப் பொறுத்தவரை ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் காலத்தில் சூழல் இருந்த தற்போது இல்லை. அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக ஆதரிக்க வேண்டிய கட்டாயம் உண்டு என்பதால், துறை சார்ந்த பொருளாதார அறிஞர்கள் இந்தப் பதவிக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. சுப்பிரமணியனின் இந்த முடிவுக்கு இதுகூட காரணமாக இருக்கலாம்.

எப்படியும் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் புதிய முதன்மைப் பொருளாதார ஆலோசகரைத் தேர்வு செய்து அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *