Share on Social Media


திருப்பூர்:விதி மீறலில் ஈடுபட்டதால், ஈஸ்டன் சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையம் மற்றும் சாய ஆலைகளின் இயக்கத்தை மாசுகட்டுப்பாடு வாரியம் முடக்கியுள்ளது.திருப்பூரில், 18 பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கு உட்பட்டு, 470 சாய ஆலைகள்; 100 தனியார் சுத்திகரிப்பு மையத்துடன் கூடிய சாய ஆலைகள் இயங்குகின்றன.
சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், சாய ஆலைகள் சிறப்பாக செயல்படுவதற்காக, மத்திய, மாநில அரசுகள், 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கியுள்ளன.இந்நிலையில், சில சாய ஆலைகளும், சுத்திகரிப்பு மையங்களும், விதிகளை பின்பற்றாமல் இயங்கி, இயற்கையை பாழாக்குகின்றன.

அவ்வகையில், முதலிபாளையம் ரோட்டில் உள்ள ஈஸ்டன் பொது சுத்திகரிப்பு மையத்தில், விதிமீறல் கண்டறியப்பட்டு, அதன் செயல்டபாட்டினை மாசுக்கட்டுபாடு வாரியம் முடக்கியுள்ளது.இது குறித்து, மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் சரவணகுமார் கூறியதாவது:ஈஸ்டன் பொது சுத்திகரிப்பு மையத்தில், ஆய்வு நடத்தப்பட்டது.

இம்மையத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பின் இறுதியில் வெளியேறும் ரசாயனங்கள் மிகுந்த திடக்கழிவு மற்றும் உப்பு கழிவுகளை, பாதுகாப்பற்றவகையில், திறந்த வெளியில் தேக்கியுள்ளனர். பாய்லரிலிருந்து கரித்துகள்கள் அதிகம் வெளியேறுகிறது.சுத்திகரிப்பு தொழில்நுட்ப மேம்பாடும் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், வாரிய தலைவரின் உத்தரவுப்படி, ஈஸ்டன் சுத்திகரிப்பு மைய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது; இம்மையத்தை சார்ந்துள்ள, 21 சாய ஆலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.எஸ்.பெரியபாளையம் சுத்திகரிப்பு மையத்துக்கு உட்பட்ட ஒரு சாய ஆலையில், பிரெயின்சொல்யூஷனை பயன்படுத்துவதில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன; அந்த ஆலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.சுத்திகரிப்பு மையம் மற்றும் சாய ஆலைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும்;

விதிமீறல்கள் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் வட்டியில்லா கடன் சலுகைகளை பெற்றுக்கொண்டு, அனுமதி பெற்ற சாய ஆலைகள், சுத்திகரிப்பு மையங்களே, இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.அரசின் வட்டியில்லா கடன் சலுகைகளை பெற்றுக்கொண்டு, அனுமதி பெற்ற சாய ஆலைகள், சுத்திகரிப்பு மையங்களே, இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *