Share on Social Media


சென்னை; நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரில் உள்ள, ‘பிமேக் எக்ஸ்போ’ ஹாலில் நடைபெறும் பொங்கல் புத்தக கண்காட்சியில், வாசகர்கள் குவிகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகைக்கு முன் துவங்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, ‘பபாசி’யின் சென்னை புத்தக கண்காட்சி, இந்தாண்டு துவங்கவில்லை.இது, வாசகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரில் உள்ள, ‘பிமேக் எக்ஸ்போ’ ஹாலில், கடந்த, 8ம் தேதி முதல், பொங்கல் புத்தக கண்காட்சி நடக்கிறது.

இது, புத்தக பிரியர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், 55 அரங்குகளில், லட்சக்கணக்கான புத்தகங்களுடன் இந்த கண்காட்சி நடக்கிறது.வரும், 18ம் தேதி வரை, தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கும் இந்த புத்தக கண்காட்சியில், 55 அரங்குகளில், 40 பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன. இங்கு, குழந்தைகள் முதல் முதியோர் வரை, அனைவரும் ஆவலுடன் படிக்கும், ஆயிரக்கணக்கான தலைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.புத்தக கண்காட்சி அரங்கில் நுழைய, அனுமதி இலவசம் என்பதாலும், அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுவதாலும், வாசகர்களின் வரவேற்பு அதிகரித்துஉள்ளது.

இன்று, நாளை, நாளை மறுநாள் என, மூன்று நாட்கள், தொடர் விடுமுறை என்பதாலும், பொழுதுபோக்கு இடங்களில், காணும் பொங்கலைக் கொண்டாட அனுமதி இல்லை என்பதாலும், சென்னையில் நடக்கும் பொங்கல் புத்தக கண்காட்சிக்கு, அதிகளவில் வாசகர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *