Share on Social Media

துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய வீராங்கனை மேரி கோம் (51 கி.கி.,) முன்னேறினார்.

துபாயில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மேரி கோம், மங்கோலியாவின் லுட்சைகான் அல்டான்செட்செக் மோதினர். அசத்தலாக ஆடிய 6 முறை உலக சாம்பியன் மேரி கோம் 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இதன்மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். ஏற்கனவே இவர், இத்தொடரில் 5 தங்கம், ஒரு வெள்ளி வென்றுள்ளார்.

பெண்களுக்கான 54 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாக்சி 3–2 என, கஜகஸ்தானின் டினாவை வீழ்த்தினார்.

பெண்களுக்கான 48 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மோனிகா, கஜகஸ்தானின் அலுவா பால்கிபெகோவா மோதினர். இதில் ஏமாற்றிய மோனிகா 0–5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.

பெண்கள் பிரிவில் நடந்த மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா (69 கி.கி.,), சிம்ரன்ஜித் கவுர் (60 கி.கி.,), ஜாஸ்மின் (57 கி.கி.,) தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றினர்.

ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் ஆஷிஸ் குமார் (75 கி.கி.,), நரேந்தர் (+91 கி.கி.,) தோல்வியடைந்து ஏமாற்றினர்.

இன்று நடக்கவுள்ள அரையிறுதியில் இந்தியா சார்பில் அமித் பங்கல் (52 கி.கி.,), வரிந்தர் சிங் (60 கி.கி.,), ஷிவா தபா (64 கி.கி.,), விகாஸ் கிருஷ்ணன் (69 கி.கி.,), சஞ்ஜீத் (91 கி.கி.,) பங்கேற்கின்றனர்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *