Share on Social Media

பாரிஸ்: உலக கோப்பை வில்வித்தை கலப்பு இரட்டையர் ‘ரிகர்வ்’ பிரிவு பைனலுக்கு இந்தியாவின் தீபிகா, அடானு தாஸ் ஜோடி முன்னேறியது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக கோப்பை வில்வித்தை ‘ஸ்டேஜ்–3’ போட்டிகள் நடக்கின்றன. இதில் ‘ரிகர்வ்’ பிரிவு கலப்பு இரட்டையர் தகுதிச் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, அடானு தாஸ் ஜோடி 5வது இடம் பிடித்தது. பின், முதல் சுற்றில் ‘பை’ பெற்ற இந்திய ஜோடி, 2வது சுற்றில் 6–0 என, இங்கிலாந்தை வீழ்த்தியது. அடுத்து நடந்த காலிறுதியில் அசத்திய இந்திய ஜோடி 6–0 என, அமெரிக்காவை தோற்கடித்தது.

அரையிறுதியில் இந்தியா, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 5–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. இதில் இந்திய ஜோடி, நெதர்லாந்தை சந்திக்கிறது. இதன்மூலம் இத்தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியானது. எட்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா, கலப்பு இரட்டையரில் இதுவரை 5 வெள்ளி, 3 வெண்கலம் கைப்பற்றி உள்ளார். தவிர இவர், இத்தொடரின் தனிநபர் பிரிவில் அரையிறுதிக்கு சென்றுள்ளார். இதில் சாதிக்கும் பட்சத்தில் தனது 2வது பதக்கத்தை கைப்பற்றலாம்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *