Share on Social Media

துபாய்: ஆசிய குத்துச்சண்டை பைனலுக்கு இந்தியாவின் அமித் பங்கல் (52 கி.கி.,), ஷிவா தபா (64 கி.கி.,) முன்னேறினர்.

துபாயில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 52 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அமித் பங்கல், கஜகஸ்தானின் சகேன் பிபோசினோவ் மோதினர். அபாரமாக ஆடிய அமித் பங்கல் 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார். இதுவரை இவர், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கம் (2017ல் வெண்கலம், 2019ல் தங்கம்) வென்றுள்ளார்.

 

ஆண்கள் 64 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஷிவா தபா 4–0 என, ‘நடப்பு சாம்பியன்’ தஜிகிஸ்தானின் பகோதுார் உஸ்மோனோவை வீழ்த்தினார்.

மற்ற இந்திய வீரர்களான விகாஸ் கிருஷ்ணன் (69 கி.கி.,), வரிந்தர் சிங் (60 கி.கி.,) அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றனர்.

 

சாக்சி ஏமாற்றம்

பெண்களுக்கான 54 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாக்சி 3–2 என, கஜகஸ்தானின் டினா ஜோலமனை வீழ்த்தினார். பின், கஜகஸ்தான் வீராங்கனை இம்முடிவை எதிர்த்து ‘ரிவியூ’ செய்தார். இதில் சாக்சிக்கு எதிராக தீர்ப்பு வர, பைனல் வாய்ப்பை இழந்து வெண்கலத்துடன் திரும்பினார்.

கடந்த 2019ல் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் ‘ரிவியூ’ முறையை அறிமுகப்படுத்தியது. இதில் போட்டியின் முடிவு 5–0 அல்லது 4–1 என இருந்தால் ‘ரிவியூ’ கேட்க முடியாது.

இதனையடுத்து பைனலுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகளின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது. இத்தொடரில் மேரி கோம் (51 கி.கி.,), பூஜா ராணி (75 கி.கி.,), அனுபமா (+81 கி.கி.,), லால்பூட்சைஹி (64 கி.கி.,) பைனலுக்குள் நுழைந்தனர்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *