Share on Social Media

மிலன்: மோட்டோ ஜிபி பைக் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் இளம் வீரர் ஜேசன் துபாஸ்குயர் 19, மரணமடைந்தார்.

இத்தாலியில் மோட்டோ கிராண்ட் பிரிக்ஸ் பைக் பந்தயம் நடந்தது. இதன் ஒன்பதாவது சுற்று திருப்பத்தில் சுவிட்சர்லாந்தின் ஜேசன் துபாஸ்குயர் சீறிப் பாய்ந்து சென்றார். திடீரென பந்தயத்தில் பங்கேற்ற மற்ற இரு பைக்குகளுடன் மோதிக் கொண்டார். இதில் துாக்கி வீசப்பட்ட ஜேசன் பலத்த காயம் அடைந்தார். ‘ஏர் ஆம்புலன்ஸ்’ மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் மூளை பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட, உயிரை காப்பாற்ற முடியவில்லை. இவரது தந்தை பிலிப் முன்னாள் பைக் பந்தய வீரர். ஜேசனின் மரணம் மோட்டார் பைக் பந்தய அரங்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *