Share on Social Media


முன்னாள் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் பேசினோம். ‘‘உயர்க்கல்வியை மேம்படுத்துவதற்கான நல்ல எண்ணத்துடன்தான் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அறிவித்தோம். முறைப்படி, இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அந்த பல்கலைக்கழகத்துக்குட்பட்டு நடத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து, மீண்டும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்தே அறிவிப்பு வெளியிடச் செய்வது, தவறானச் செயல். பெரியார், பாரதியார், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் பெயர்களில்தான் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருகின்றன.

முன்னாள் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

முன்னாள் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

அப்படியிருக்கும்போது, உயர்க்கல்வித்துறையில் மகத்தான சாதனையைப் படைத்த ஜெயலலிதா அம்மையார் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதில் தவறேதுமில்லையே… பெயருக்காக மூட முடிவெடுப்பது தவறான முன் உதாரணமாகிடும். எனவே, மாணவர் நலனைப் பாதிக்காமல், ஜெயலலிதா பல்கலைக்கழக நிர்வாகத்தை செயல்பட தி.மு.க அரசு அனுமதிக்க வேண்டும்’’ என்கிறார்.

இப்போதைய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியைப் போனில் தொடர்புகொண்டு, ‘‘ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படுமா? இயங்க அனுமதிக்கப்படுமா?’’ என்கிற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு அவர், ‘‘இதுபற்றி, இன்னும் முடிவு செய்யப்படவில்லை’’ என்று ஒற்றை வரியில் பதில் கூறியிருந்தார். இந்த நிலையில், ‘‘பெயரளவுத் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் தனித்து செயல்பட அனுமதிக்க முடியாது. அண்ணாமலை பல்கலையுடன், ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைக்கப்படும்’’ என்று அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார்.

அப்படியெனில், ‘‘ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம், அரசியல் வெறுப்புணர்ச்சிக் காரணமாக முடக்கப்படுவதும் உறுதியாகிவிட்டது’’ என்கிறார்கள் கல்வியாளர்கள். அமைச்சர் பொன்முடியின் இந்த அறிவிப்புக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பல்கலைக்கழகம் முடக்கப்படுவதற்கு எதிர்த்து தெரிவித்து வரும் 26-ஆம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *