Share on Social Media


ஒவ்வொரு முறையும் பேட்டிக்காகப் பேசும்போதெல்லாம், “என் பேரை ஜனனின்னு மட்டும் போடுங்க ப்ளீஸ். அந்த ஐயர் வேண்டாமே” என்று ரெக்வெஸ்ட் வைப்பார் நடிகை ஜனனி. அவருடைய வேண்டுகோளை ஏற்று அவள் விகடன் முகநூலில் `நடிகை ஜனனி’ என்று நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். இந்நிலையில், ஜனனி தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலிருந்த `ஜனனி ஐயர்’ என்ற பெயரை ‘ஜனனி ஹியர்’ என்று மாற்றியதோடு, “மாற்றம் ஒன்றே மாறாதது; என்றும் ஒற்றுமையுடன் ஜனனி” என்கிற கேப்ஷனுடன் தன்னுடைய புகைப்படத்தை அப்லோடு செய்திருக்கிறார்.

நடிகை ஜனனி

நடிகை ஜனனி

ஜனனியை ஃபாலோ செய்பவர்கள், இதை `மரியாதைக்குரிய மாற்றம்’, `மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறீர்கள்’, `சிறப்பு, மிகச்சிறப்பு’, `கிரேட்’, `லவ்லி’, `பார்க்கிறதுக்கு மகிழ்ச்சியா இருக்கு’, `நன்றி, இப்படியே தொடருங்கள்’ என்று கைத்தட்டல் எமோஜிகளையும் ஹார்ட்டின்களையும் பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *