Share on Social Media

விவாதமாகும் மனநலம்!

கிரிக்கெட் வீரர்கள் ஓய்வே இல்லாமல் விளையாடி வருவதுதான் பிரச்னைகளுக்கான ஆரம்பம். சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மட்டுமல்லாமல் ஐபிஎல், பிக்பேஷ், தி ஹண்ட்ரட், கவுன்ட்டி கிரிக்கெட் என கிளப் கிரிக்கெட்டுகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கிடையே கடந்தாண்டு முதல் கொரோனா வைரஸ் பிரச்னை உருவாக பயோபபுள் செட்அப்புக்குள் வீரர்கள் அடைக்கப்பட்டனர்.

வெளியே போகமுடியாதது, குடும்பத்தினரை சந்திக்கமுடியாதது எனப் பல விஷயங்களும் அவர்களைப் போட்டு அழுத்த, ஆட்டத்தில் கவனம் செலுத்தமுடியாமல் தடுமாறுகிறார்கள். இதனால் ஒரு ஆட்டத்தில் சொதப்பினாலும் அது மிகப்பெரிய விவாதமாகவும், விமர்சனமாகவும் மாறுவதால் அதை எதிர்கொள்ளவே மிகவும் போராடுகிறார்கள். இதுதான் வீரர்களின் மனசோர்வுக்கு காரணமாக இருக்கிறது. அந்தவகையில் பாதிக்கப்பட்டிருப்பவர்தான் பென் ஸ்டோக்ஸ். கடந்த ஐபிஎல், பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச போட்டிகள், தி ஹண்ட்ரட் என சமீபமாக விளையாடிய எந்த போட்டியிலும் பென் ஸ்டோக்ஸ் பெரிதாக பெர்ஃபார்ம் செய்ய முடியாமல் திணறினார்.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

“பென் தனது உணர்வுகளை வெளிப்படையாக எடுத்து சொன்னார். எப்போதுமே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் மன நலனுக்கு அதிக கவனம் கொடுக்கும். எங்களால் முயன்றவரை வீரர்களை ரொட்டேஷன் அடிப்படையில் பயன்படுத்தி அவர்களுக்கான சுமையைக் குறைத்தோம். ஆனாலும், கொரோனா சூழல் வீரர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. பென் அவருக்குத் தேவைப்படும் வரை ஓய்வெடுக்கலாம். இங்கிலாந்து கிரிக்கெட்டின் கதவுகள் எப்போதும் அவருக்குத் திறந்தே இருக்கும்’’ என்று சொல்லியிருக்கிறார் இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் ஆஷ்லே கில்ஸ்.

தனிப்பட்ட முறையில் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் இழப்பையும் சந்தித்திருந்தார். அவரது தந்தை ஜெரார்டு ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார். பென் ஸ்டோக்ஸின் தயான டெமிக்கு இவர் இரண்டாவது கணவர். டெமியின் முதல் கணவர் பென் ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு முன்பாக அவர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் சுட்டுக்கொன்றதோடு தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்ற அந்த வாரம் ஒரு இங்கிலாந்து பத்திரிகை செய்தியாக வெளியிட்டது.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

‘’மிகவும் தனிப்பட்ட செய்தியான இதை வெளியிடவேண்டிய அவசியம் என்ன’’ என கேள்வியெழுப்பி அப்போது கண்டனம் தெரிவித்திருந்தார் பென் ஸ்டோக்ஸ். மேலும் பென் ஸ்டோக்ஸின் குடும்பத்தினர் நியூசிலாந்தில் வாழ்ந்துவந்ததால் அடிக்கடி அங்கே போய் வந்துகொண்டிருந்தார் பென் ஸ்டோக்ஸ். இதுவும் விமர்சிக்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையிலுமே சவால்களை சந்தித்துக்கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸுக்கு கிரிக்கெட்டும் மிகுந்த அழுத்தம் ஏற்படுத்தவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

பென் ஸ்டோக்ஸின் விலகல் கிரிக்கெட் வீரர்களின் பணிச்சுமையை விவாதத்துக்குள்ளாக்கியிருக்கிறது. இங்கிலாந்து வீரர்களைவிடவும் இந்திய வீரர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் ரொம்பவே அதிகம். விரைவில் பிசிசிஐ, வீரர்கள் நலன் காக்க பல நடவடிக்கைகள் எடுக்கும் என எதிர்பார்ப்போம்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *