IMG 20201022 WA0015 Tamil News Spot
Share on Social Media

கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பெமிலா. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். இவரை உயரதிகாரிகளும், சில ஊழியர்களும் பணி செய்ய விடாமல் இடையூறு செய்து தாக்க முயன்றதாகக் கூறி, நேற்று முந்தினம் முட்டம் ஆரம்ப சுகாதார வாயிலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் மீண்டும் பணிக்குச் சென்றபோது, அவர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட முடியாதபடி ரெஜிஸ்டர் புத்தகத்தை மறைத்துவைத்திருப்பதாக நேற்று புகார் கூறியிருக்கிறார். இது குறித்து பெமிலா கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் போஸ்கோ ராஜ் எனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்கிறார்.

இதனால நான் அவர்மீது காவல் நிலையத்திலும், துறை அதிகாரிகளுக்கும் பல முறை புகார்கள் கொடுத்திருக்கிறேன். என்னை மருத்துவமனையிலிருந்து தனிமைப்படுத்துறதுக்கு சக ஊழியர்களை அவர் பயன்படுத்திக்கிட்டிருக்கார்.

IMG 20201022 WA0011 Tamil News Spot
சுகாதாரத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜ்

எனக்குப் பல மிரட்டல்கள் வருது. அதனாலதான் வீட்டுல இருந்தா குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுடும்னு டெய்லி வேலைக்கு வரும்போது குழந்தையையும் கூட்டிக்கிட்டு வர்றேன். எனக்கு ஏற்பட்ட நெருக்கடி பத்தி தமிழக முதல்வர், பெண்கள் ஆணையம், மனித உரிமை ஆணையம், பிரதமர் அலுவலகம் வரைக்கும் புகார் மனு அனுப்பியும் எந்தத் தீர்வும் ஏற்படலை. முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில வேலை பார்க்க விடாம கடந்த பிப்ரவரி மாசத்துல இருந்தே எனக்கு ஹராஸ்மென்ட் நடந்துக்கிட்டிருக்கு. இது பற்றி புகார் கொடுத்ததுனால என்னை எப்படி தாக்கலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டிருக்காங்க. அதுல ஒரு முயற்சியாத்தான் என்னை பரமக்குடிக்கு டிரான்ஸ்ஃபர் செஞ்சிருக்கா ங்க.

Also Read: குமரி: `பாரம்பர்யம் தவறினால் தடுத்து நிறுத்துவோம்!’ – எச்சரிக்கும் இந்து முன்னணியினர்

நான் பரமகுடிக்கு வேலைக்கு போக முடியாதுன்னு அப்பீல் எழுதி கொடுத்திருக்கேன். இப்போ நான் முட்டத்துலதான் வேலைக்குப் போய்க்கிட்டிருக்கேன். அட்டெண்டன்ஸை ஒளிச்சுவெச்சிருக்காங்க. அதனால நான் ஜி.பி.எஸ் மூலமா லொக்கேஷனை போட்டோ எடுத்து காலையில 9 மணிக்கும், சாயங்காலம் 4 மணிக்கும் அதிகாரிங்களுக்கு அனுப்பிக்கிட்டிருக்கேன். வேற டாக்டர்களுக்கும் இதுபோல பிரச்னைகள் இருக்கு. அவங்க அமைதியா போறாங்க, நான் எதிர்த்துப் போராடுறதுனால என்னை டார்க்கெட் பண்ணுறாங்க” என்றார்.

16 Tamil News Spot
பாலியல்

இது பற்றி சுகாதாரத்துறை டி.டி போஸ்கோ ராஜிடம் பேசினோம். “இவங்க சொன்ன குற்றச்சாட்டு பற்றி ஸ்டேட் விமன் கமிஷன் கடந்த 6-ம் தேதி விசாரணை நடத்தியிருக்காங்க. அதுல இவங்க குற்றச்சாட்டு பொய்யினு நிரூபணமாகியிருக்கு. அதனால சென்னையிலயிருந்தே அவங்களுக்கு பனிஷ்மென்ட் குடுத்து டிரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க. அவங்க பாலியல் குற்றச்சாட்டு சொல்லுவாங்கனு சொல்லி என்னை விசாரணைக்கு போட வேண்டாம்னு சொல்லிட்டேன். அதனால லேடி ஆபீஸரைப் போட்டு விசாரணை நடத்தியிருக்காங்க. இந்த டிரான்ஸ்ஃபருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *