இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன், பத்தாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக்குப் போக அனுமதியில்லாமல், வீட்டுக்கு அருகிலேயே டைப் ரைட்டிங் போன பெண்கள் அநேகம். அதன் பிறகு, அவர்களைப் போன்றவர்கள், ப்ளஸ் டூ வரை படிக்க வந்ததே, ‘இப்ப கல்யாணம் பண்ண கூடாதாமே… வீட்ல இருக்குறதுக்கு ஸ்கூலுக்கு போகட்டுமே’ என்ற பெற்றோரின் மனப்பான்மையால்தான்.
இந்தத் திருமண வயது உயர்வு, பெண்கள் எல்லோருமே கல்லூரிப் படிப்பை முடிக்கிற ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்…” என்கிறார் சுமதிஸ்ரீ.
“இது எங்களின் நீண்டநாள் கோரிக்கை. பெண்களுக்கு 17 வயது ஆகும்போதே மாப்பிள்ளை பார்த்து வைத்துவிட்டு 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வைக்கிறார்கள். இதனால் அவர்கள் இளம்தாயாக மாற நேரிடுகிறது. மேலும் அவர்களுக்கு ஊட்டசத்து குறைபாடும் ஏற்படுகிறது. கல்வித் தகுதி, கனவு என எதுவும் இல்லாமல் போகிறது. திருமண வயதை உயர்த்தும்போது பெண்களுக்கு உலக அனுபவம் கிடைக்கும். நிச்சயம் வரவேற்கக்கூடிய விஷயம்…” என்கிறார் திலகபாமா.