தென்கொரியாவில் ஏற்கெனவே, பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், விளம்பரத்தில் இப்படி அதுபோன்ற காட்சியை சேர்த்திருப்பதையும், பெண்களை பசுக்கள் போல சித்திரித்திருப்பதையும் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
இதனையடுத்து சியோல் மில்க்கின் தாய் நிறுவனமான சியோல் பால் கூட்டுறவு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தங்கள் நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்திற்காக மன்னிப்பு கோரியிருந்தது. “கடந்த மாதம் 29-ம் தேதி சியோல் மில்க் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட பால் விளம்பர வீடியோவின் விருப்பத்தகாத காட்சிகளால் சங்கடப்பட்ட அனைவரிடமும் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.