Share on Social Media


பெண்கள் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் பல நோய்கள் வரக்கூடும். அதில் மிக மோசமான ஒன்றுதான் பிசிஓடி (பாலி சிஸ்டிக் ஓவேரியன் டிஸ்ஸார்டர்) கருப்பையில் ஏற்படும் கட்டி என்று இதை கூறலாம்.

இதுவரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக வேலைக்கு சென்று வந்த காலத்தில் நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தது. எப்போது ஒர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே அலுவலக வேலை என்று வந்ததோ, அதிலிருந்து நேரம் காலம் இல்லாமல் கணினி முன் உட்கார்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது.

முன்பெல்லாம் உணவு உண்பதற்கு என்று தனியாக அரை மணி நேரம் இருந்தது. ஆனால் இப்போது ஒரு 10 நிமிடம் கிடைத்தாலே பெரிய விஷயம் போல் ஆகிவிட்டது. சிலர் காலையில் எழுந்தது முதல்  வேலையில் இறங்கி விடுகின்றனர். மாலை வரை பல் கூட துலக்குவது இல்லை. இப்படியே சென்றால் ஆரோக்கியம் பாதிப்படைவது நிச்சயம்.

பெண்கள் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் பல நோய்கள் வரக்கூடும். அதில் மிக மோசமான ஒன்றுதான் பிசிஓடி (பாலி சிஸ்டிக் ஓவேரியன் டிஸ்ஸார்டர்) கருப்பையில் ஏற்படும் கட்டி என்று இதை கூறலாம்.

இந்த கட்டியில் நீர் அதிகமாக தேங்கி இருக்கும். இதனால் மாதவிடாய் தள்ளிப்போகும். வெகு நாட்கள் சரி செய்யாமல் இருந்தால் முகத்தில் முடி வளர்ச்சி , உடல் பருமன், முகப்பரு மற்றும் கருவுறுதலில் சிக்கல்கள் ஏற்படும்.

இது போன்ற நோய் பற்றி அதிகம் விழிப்புணர்வு தேவை. அதுவும் வீட்டிலேயே பணிபுரியும் நபருக்கு நிச்சயமாக பாதிப்பு அதிகம் வர வாய்ப்பு உண்டு.

இதற்கு முக்கியமான காரணம் சரியான ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் சோம்பேறியாக இருப்பது தான். அதிகக்கொழுப்பு சத்துள்ள துரித உணவு உண்பதாலும் இது வரக்கூடும். மாதவிடாய் வராமல் நின்று விட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பல மாதங்கள் வரவில்லையெனில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து இதை உறுதிப்படுத்தலாம்.

தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். சில நேரங்களில் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே இதை சுலபமாக குணப்படுத்தலாம். உடல் எடையை குறைத்தல் மற்றும் உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள் செய்ததால் போதுமானது.

இதற்கான மற்றுமொரு காரணம் மன அழுத்தம். இதை நுனியிலேயே கிள்ளிவிட்டால் இந்த நோய் மட்டுமல்ல வேறு எந்த நோயும் அண்டாது.

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது இதையெல்லாம் எப்படி சரி செய்வது? இதற்காக எப்படி நேரம் செலவழிப்பது? என்று குழப்பமாக இருந்தால் இதன் பின் விளைவுகளை பற்றி சற்று சிந்தித்து பாருங்கள்.

வேலையின் இடைவெளிகளில் உடற்பயிற்சி செய்யலாம். பால் சார்ந்த பதப்படுத்திய உணவுப்பொருட்கள்  அதிகம் எடுத்துக் கொள்ளலாமல் இருக்கலாம். மூச்சுப்பயிற்சி செய்து மன அழுத்தத்தை குறைக்கலாம். முடிந்த வரை ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். கிடைத்த நேரத்தில் ஓடி அசைந்து விளையாடுவது போல் ஏதாவது உடல் இயக்கம் சார்ந்த வேலைகளை செய்தால் உடற்பயிற்சி செய்வது போல் கடினமாக தோன்றாது.

எடைக்குறைவு மன நிம்மதி மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இருந்தால் வெகு விரைவில் மாற்றத்தை உணரலாம்.


https://www.youtube.com/watch?v=videoseries

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *