Share on Social Media


தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிராமப்புற பெண்கள், சுயசார்போடு குடும்பத்தை வழி நடத்தவும், பொருளாதார ரீதியாக வெற்றிநடை போடவும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெரும் துணையாக திகழ்கின்றன. கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் இக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களால் சிறு தொழில்கள் செய்து இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இது பக்கபலமாக உள்ளது. இந்நிலையில்தான் கூட்டுறவு வங்கிகளில் இவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது எந்தளவுக்கு சாத்தியம்? இது எந்தளவுக்கு இவர்களுக்கு பயன் அளிக்கும்? இதுகுறித்து சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் என்ன சொல்கிறார்கள்? இந்த தேடலில் இறங்கியபோது, பெண்களின் தனித்துவமான, ஓர் உயரிய குணம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

தமிழ்நாட்டு பெண்கள், தங்களது குடும்பத்தை பொருளாதார ரீதியாக வெற்றிகரமாக வழிநடத்துவதில் வல்லவர்கள். இது, இன்று நேற்றல்ல… காலம் காலமாக இது தொடர்ந்து வருகிறது. இதனால்தான் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இப்படி பாடினார்.

“சேத்த பணத்த சிக்கனமா

செலவு பண்ண பக்குவமா

அம்மா கையிலே கொடுத்து போடு

சின்னக் கண்ணு

அவங்க ஆற நூறு ஆக்குவாங்க

செல்லக் கண்ணு” எனப் பாடல் எழுதினார்.

ஆனால், காலப்போக்கில் ஆண்கள், தங்களது குடும்பத்துப் பெண்களிடம் பணம் கொடுத்து வைக்கும் பழக்கம் கைவிட்டுப்போனது. குடும்ப செலவுகள் ஒவ்வொன்றுக்கும் ஆண்களிடம் பணம் எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை உருவானது. இந்த குறையை போக்கும் விதமாகதான், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 8,000 -10,000 சுய உதவிக்குழுக்கள் இயங்குகின்றன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *