Share on Social Media


புதுடில்லி: ‘பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வின் வாயிலாக மக்களுக்கு துன்பத்தை கொடுத்து அதில் மத்திய அரசு லாபம் சம்பாதிக்கிறது’ என காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை கடந்த சில நாட்களில் கடுமையாக உயர்ந்துள்ளன.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதன் விபரம்:நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வேலை இழந்து வருகின்றனர். இதன் காரணமாக நிரந்தர வருமானம் இன்றி தவிக்கின்றனர். ஏழை மக்கள் நடுத்தர வர்க்கத்தினர் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நேரத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு தினந்தோறும் உயர்த்தி வருகிறது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளன.தங்கள் தவறான நிதிக் கொள்கைகளை மறைக்க முந்தைய ஆட்சியின் மீது மத்திய அரசு பழி சுமத்தி வருகிறது.மக்களுக்கு துன்பத்தை தந்து அதில் லாபம் சம்பாதிக்கும் போக்கை மத்திய அரசு நிறுத்த வேண்டும். பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *