Share on Social Media


புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் சோனியா கூறி உள்ளதாவது: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை உயர்வால், எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இதனால், மத்திய அரசு எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக ரூ.21 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்து உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது கொடூரமானது. இவ்வாறு சோனியா தெரிவித்து உள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *