Share on Social Media


சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:  கொரோனா நோய் தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். தற்பொழுது பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு சென்னையில் 95.28பைசாவிற்கும், டீசல் 89.39 பைசாவிற்கும் விற்கபடுகிறது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் 100  நெருங்கிவிட்டது. இந்த விலையேற்றத்தால் மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தாங்களே விலையை நிர்ணயம் செய்துகொண்டு, விலையேற்றம் செய்துகொண்டு இருக்கிறது.

இந்நிலை இனிமேலும் தொடராமல் இருக்க மத்திய அரசு அவர்களை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையேல் அந்த அதிகாரத்தை தாங்களே எடுத்துக்கொள்ள வேண்டும்.அதோடு மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால் பெட்ரோல் டீசல் விலை மேலும் குறையும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *