Share on Social Media


இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்திய ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் செயலி உளவு பணிகளுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஒற்றறியும் பெகாசஸ் செயலியின் மூலம் உளவு அமைப்புகளால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என அனைத்து விதமான இயங்கு தளங்களிலும் ஊடுருவி பயனர்களின் தரவுகளைத் திருடி அவர்களின் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணிக்க முடியும்.
இணையச் சந்தையில் வெளியான சில மாதங்களிலேயே இந்த செயலிக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. 2019-ல் இந்த ஒற்றறியும் செயலியினைப் பயன்படுத்தி பயனர்களின் வாட்ஸ்-அப் தரவுகள் திருடப்படுவதாக வாட்ஸ்-அப் நிறுவனம் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தது. ஆனாலும், இந்த செயலியின் பயன்பாடானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வந்தது. இந்த ஒற்றறியும் செயலி உருவாக்கப்பட்டது அரசாங்க உளவு அமைப்புகளின் பயன்பாட்டுக்காகத்தான் என்று சொல்லப்பட்டாலும், அரசாங்கங்களைத் தாண்டி தனி நபர்களும் இதை அதிகளவில் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

‘பெகாசஸ்’ ஸ்பைவேர்

குறிப்பாக, ஆளும் அரசாங்கங்களின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், போராளிகள் மற்றும் மாற்று அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் அரசியல் தலைவர்களின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்கவும், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றவும் ‘பெகாசஸ்’ செயலியைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தைக் குறி வைத்து பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயலியின் மூலம் ஆப்பிள் தொலைப்பேசிகளைக்கூட மிக எளிதில் ஹேக் செய்து விட முடியும் என்கிறார்கள். தூதரக அதிகாரிகள், அரசியல் அதிருப்தியாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசாங்க அதிகாரிகள் என ‘பெகாசஸ்’ செயலி உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கைகளில் தகவல் வெளியாகியிருக்கிறது. அதே போல், இந்தியாவிலும் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என ஏராளமானோர் இந்த ஒற்றறியும் பெகாசஸ் செயலியினை பயன்படுத்தி வருவதாகக் 2019-ல் தகவல்கள் வெளியாகி இந்திய அரசியலில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு வாஷிங்க்டன் போஸ்ட் மற்றும் லண்டன் கார்டியன் உள்ளிட்ட சர்வதேச பத்திரிகைகள், இந்தியாவில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைப்பேசிகள் இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் செயலியைப் பயன்படுத்தி ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக முக்கியமான தகவல்களை வெளியிட உள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், முன்னணி ஊடகவியலாளர்களும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருவதால், சுமார் ஒன்றரை வருடத்திற்குப் பிறகு இந்தியாவில் பெகாசஸ் செயலி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதைப் பார்க்கலாம்:-

“இந்தியாவில் மோடியின் மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைப்பேசிகளை இஸ்ரேலிய நிறுவனத்தின் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய நேரப்படி இன்று மாலை வாஷிங்டன் போஸ்ட் & லண்டன் கார்டியன் பத்திரிகைகள் ஒரு அறிக்கையை வெளியிட இருப்பதாக வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்த பட்டியலை நான் வெளியிடுவேன்” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணிய சுவாமியின் பதிவிற்குப் பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஓ.பிரெய்ன் “எதிர்க் கட்சித் தலைவர்களும்கூட பெகாசஸ் மூலம் கூறி வைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் சிதம்பரம் இந்த விவகாரம் குறித்து சூசகமாக, “பெகாசஸ் வெடிக்கப் போவதாக எனக்குத் தகவல் வந்திருக்கிறது” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.


ஷீலா பட் தனது ட்விட்டர் பதிவில், “உண்மையில் பெகாசஸ் கதை மிகப்பெரிய கதை. இந்த விவகாரம் குறித்து இந்தியச் செய்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சர்வதேச செய்தி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு) முக்கியமான அறிக்கை வெளியிடப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

பி.பி.சி செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் முரளிதரன் தனது சமூக ஊடக பக்கங்களில், “பல அதிரவைக்கும் தகவல்களைக் கொண்ட செய்தி ஒன்று இன்று மாலை சில சர்வதேச இதழ்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Fingers Crossed” என்று பதிவிட்டுள்ளார்.

Screenshot 2021 07 18 16 12 12 25 0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb Tamil News Spot
015e5f8c c333 45cc 9430 f2808ab9f8b1 Tamil News Spot
முரளிதரன்

முன்னதாக 2019-ல் இந்தியாவில் பெகாசஸ் பயன்பாட்டில் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அப்போதைய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடாளுமன்றத்தில் அரசாங்க நிறுவனங்களில் பெகாசஸ் பயன்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் இந்திய மக்கள் அனைவரையும் மாலை 6.00 மணியை எதிர்நோக்கி பலமான காத்திருப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மாலை 6 மணிக்கு ‘பெகாசஸ்’ பட்டாசு வெடிக்குமா?, வெடித்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *