Share on Social Media


புதுடில்லி: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எப்போது போடப்படும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவிட் தடுப்பூசி தொடர்பாக, மத்திய அரசை, காங்கிரஸ் மற்றும் அக்கட்சி முன்னாள் தலைவர் ராகுல் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கோவிட் 3வது அலையை தவிர்க்க தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. பூஸ்டர் டோஸ் போடும் பணியை எப்போது துவங்கும் எனக்கூறியுள்ளார். மேலும், தடுப்பூசி போடும் பணிகள் தொடர்பான புள்ளி விவரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், தற்போது தடுப்பூசி போடும் விகித அளவில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்தால், இந்தாண்டு இறுதிக்குள் 42 சதவீத மக்களுக்கு தான் தடுப்பூசி போட முடியும். ஆனால், 3வது அலையை தடுப்பதற்கு 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதற்கு தினமும் 61 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். கடந்த 7 நாட்களாக சராசரியாக 5.8 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 5.7 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *