Share on Social Media


பெங்களூரு பயதர்ஹலி என்ற இடத்தில் வசிப்பவர் சங்கர். பத்திரிகையாளரான சங்கர் கடந்த ஞயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டை விட்டு சென்று இருந்தார். அவர் 5 நாட்கள் கழித்து அதாவது வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவரது மனைவி உட்பட குடும்பத்தில் இருந்த 5 பேர் இறந்து கிடந்தனர். இரண்டரை வயது குழந்தை மட்டும் இறந்த உடல்களுடன் இருந்தது. அக்குழந்தையும் அரை மயக்கத்தில் இருந்தது. குழந்தையின் தாய் சிஞ்சனா(34), பாட்டி பாரதி(51), குழந்தையின் சித்தி சிந்தூரனி, குழந்தையின் மாமா மது சாகர் ஆகியோர் இறந்து கிடந்தனர்.

தற்கொலை செய்த குடும்பம்

தற்கொலை செய்த குடும்பம்

அவர்களுடன் 9 மாத குழந்தை கூட இறந்து கிடந்தது. இறந்தவர்கள் கொலை செய்யப்பட்டதற்கான எந்த வித அறிகுறியும் இல்லை என்கிறார்கள் காவலர்கள். அவர்கள் தற்கொலை செய்திருக்கவேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கூடுதல் கமிஷனர் முகர்ஜி இது குறித்து கூறுகையில், “என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தனர் என்று இன்னும் தெரிய வரவில்லை. உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் உடல் சனிக்கிழமை(இன்று) பிரேத பரிசோதனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *